முட்டையின் மஞ்சள் கருவினுள் வெள்ளைக்கரு; வியக்கவைக்கும் தொழிநுட்பம்!

முட்டை மிகவும் சத்துள்ள உணவென்று அறிந்திருப்பீர்கள். இதன் வெள்ளைக்கருவும் மஞ்சள் கருவும் தனித்தனியே தமக்கான இயல்புக்கேற்ற உயிர்ச் சத்துக்களினைக் கொண்டுள்ளன என்பதும் தெரிந்திருப்பீர்கள்.

பொதுவாக முட்டை ஓட்டினுள் மஞ்சள் கரு உள்ளேயும் வெள்ளைக் கரு வெளியேயுமே அமைந்திருக்கும். முட்டையின் உயிர் மையம் மஞ்சள் கருவினுள் தான் காணப்படும். ஒரு முட்டையை அவிக்கின்றபோது கோள வடிவமாகக் காணப்படும் மஞ்சள் கருவினைச் சுற்றி வெள்ளைக்கரு பாதுகாப்பு வளையம் போல இருப்பதை அவதானித்திருப்பீர்கள்.

Image result for egg white yolk in turn

உண்மையிலேயே முட்டையின் மஞ்சள் கருவுக்கு வெள்ளைக்கரு பாதுகாப்பு வேலி தான். அதனால் தான் அது அடர்த்தி கூடிய திரவமாக அமைந்து உயிர் மையமான மஞ்சள் கருவினைப் பாதுகாக்கின்றது.

இது ஒரும்புறம் இருக்க, முட்டை வெள்ளைக்கருவின் பாதுகாப்பு வேலியாக மஞ்சள் கருவினை எவ்வாறு கொண்டுவரலாம்? அதாவது முட்டையை அவித்தபின் அதன் வெள்ளைக்கரு உள்ளேயும் மஞ்சள் கரு வெளியேயும் இருக்குமாறு எவ்வாறு மாற்றியமைக்கலாம்?

Related image

இது முகவும் இலகுவானதுதான், ஆனால் விஞ்ஞான பூர்வமான விசையின் மூலமே இது சாத்தியமாகின்றது. சாதாரணமாக முட்டையை உடைத்துவிட்டு அதிலிருந்து மஞ்சள் கருவினை நீக்குவது கடினமாக இருக்கும். இதன்போது மஞ்சள் கரு சேதாரமாக்கப்படவும் வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

ஆனால் முட்டையை உடைக்காமலே அதன் மஞ்சள் கருவை வெள்ளைக்கருவின் பாதுகாப்பு வேலியாக மாற்றுவதாயின் முட்டையை ஒரு ஒழுங்கு முறைப்படி சுழற்றவேண்டும். குறிப்பாக ஒரு நாடா துணியினுள் முட்டையை சுற்றிவிட்டு அந்த நாடாவின் இரு அந்தத்தினையும் பிடித்தவாறு வேகமாக சுழற்றவேண்டும்.

Related image

இவ்வாறு சுழற்றுகின்றபோது அடர்த்தி குறைந்த திரவமான மஞ்சள் கரு கலங்கி அடர்த்தி கூடிய திரவமான வெள்ளைக்கருவுக்கு நடு மையத்தில் வழி விட்டுக் கொடுக்கின்றது. இதனால் வெள்ளைக்கரு யாவும் நடு மையத்துக்கு வந்ததும் மஞ்சள் கரு வெள்ளைக்கருவின் பாதுகாப்பு வேலிபோல் மாறிவிடும்.

மீண்டும் மஞ்சள் கருவினை அதே நிலைக்கு கொண்டு செல்ல முடியுமா என்றால் இல்லை என்பதுதான் விடை.

Image result for egg white yolk in turn

முட்டையின் மஞ்சள் கருவினுள் வெள்ளைக்கரு; வியக்கவைக்கும் தொழிநுட்பம்!

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்