இலங்கை – பாகிஸ்தான் மோதும் ஒருநாள் தொடர் இன்று ஆரம்பம்

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணி­க­ளுக்­கி­டை­யி­லான முத­லா­வது ஒருநாள் போட்டி இன்று டுபாயில் நடை­பெ­ற­வுள்­ளது.

ஐக்­கிய அரபு எமி­ரேட்­ஸுக்கு சுற்றுப் பயணம் மேற்­கொண்டு பாகிஸ்தான் அணி­யு­ட­னான மூன்­று­வகை கிரிக்கெட் தொடரில் விளை­யா­டி­வரும் இலங்கை அணி அவ்­வ­ணி­யுடன் ஐந்து போட்­டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோத­வுள்­ளது.

இலங்கை – பாகிஸ்தான் அணி­க­ளுக்­கி­டையில் ஏற்­க­னவே நடை­பெற்ற இரண்டு போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை அணி முழு­மை­யாக வென்று, பாகிஸ்­தானின் இரண்­டா­வது தாய­க­மாக கரு­தப்­படும் ஐக்­கிய அரபு எமிரேட்ஸ் மண்ணில் பாகிஸ்­தானை வீழ்த்­திய முத­லா­வது அணி என்ற  சாத­னை­யையும் நிகழ்த்­தி­யது.

இதில் முக்­கி­ய­மாக இலங்கை டெஸ்ட் வர­லாற்றில் முதன்­மு­றை­யாக விளை­யா­டிய பக­லி­ரவு டெஸ்ட் போட்­டி­யிலும் வெற்­றி­பெற்று வர­லாற்றில் இடம்­பி­டித்­தது.

கடந்த சில காலங்­களில் பெரும் பின்­ன­டைவை சந்­தித்­து­வந்த இலங்கைக் கிரிக்கெட் அணிக்கு டெஸ்ட் தொடரில் வென்­றதன் மூலம் மீண்டும் உற்­சா­க­ம­டைந்­துள்­ளது.

எப்­படி வெற்­றி­பெ­று­வது என்­பதை இலங்கை அணி மறந்­து­விட்­டது என்ற விமர்­ச­னத்­திற்கு முற்­றுப்­புள்­ளி­வைத்து டெஸ்ட் தொடரை வென்­றுள்ள இலங்கை அணி ஒருநாள் தொட­ரிலும் தங்­களை நிரூ­பிக்க வேண்­டிய கட்­டா­யத்தில் இன்று கள­மி­றங்­கு­கி­றது.

உபுல் தரங்­க தலை­மை­யி­லான இலங்கை ஒருநாள் அணியில் கபு­கெ­தர மற்றும் திரி­மான்ன ஆகியோர் இணைக்­கப்­பட்­டுள்­ளனர்.

அத்­தோடு இலங்கை அணியின் வேகப்­பந்து வீச்­சாளர் லசித் மலிங்க மற்றும் முன்னாள் தலைவர் அஞ்­சலோ மெத்­தியூஸ் ஆகியோர் அணி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்­டுள்­ளனர்.

மறு­மு­னையில் இலங்கை அணி­யிடம் டெஸ்ட் தொடரில் அடைந்த தோல்­விக்கு பாகிஸ்தான் அணி ஒருநாள் தொடரின் மூலம் பதி­லடி கொடுக்க எத்­த­னிக்கும்.

நிச்­ச­ய­மாக அவர்கள் போராட்ட குணத்­துடன் இந்தப் போட்­டியை அணு­குவர் என்­பது நிச்­சயம்.

இது­வ­ரையில் இவ்­விரு அணி­களும் மோதி­யுள்ள மொத்த போட்­டி­களின் படி பார்க்­கையில் பாகிஸ்தான் அணியே அதிக போட்­டிகளில் வெற்­றி­பெற்­றுள்­ளது.

புள்­ளி­வி­ப­ரங்கள் எப்­படி இருந்­தாலும் ஒருநாள் தொட­ரிலும் வெற்­றி­பெற்று இலங்கை அணி சாதிக்கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

இன்றைய போட்டி இலங்கை நேரப்படி மாலை 4.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணி

உபுல் தரங்க (அணித் தலைவர்), துஷ்மந்த சமீர, கபுகெதர, சந்திமால், அகில தனஞ்சய, வெண்டர்சே, மிலிந்த சிறிவர்தன, குசல் மெண்டிஸ், நுவன் பிரதீப், திக்வெல்ல, திரிமான்ன, பிரசன்ன, திஸர பெரேரா, சுரங்க லக்மால், விஷ்வ பெர்னாண்டோ.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்