அரசியல் கைதிகளுக்காக ஆளுநர் அலுவலகம் முன் திரண்ட மக்கள் படை…

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழிப்பாணத்தில் இன்று காலை பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டம் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் அலுவலகம் முன்பாக   இடம்பெறுகின்றது.

இந்த போராட்டத்தை தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்புடன் இணைந்து 15ற்கும் மேற்பட்ட அமைப்புக்கள் மேற்கொள்கின்றன.

நீண்ட காலமாக  சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை அரசியல் தீர்மானம் மேற்கொண்டு விடுதலை செய்ய வேண்டும் என  மைத்திரி,ரணில் தலைமையிலான நல்லாட்ச அரசாங்கத்திற்கு  அழுத்தம் கொடுக்கும் முகமாகவே அந்த போராட்டம்  அமைந்துள்ளது.

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி வடமாகாணம் முழுவதும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படும் அதேவேளை  போராட்டமும் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்