தமிழ் மக்களின் உணர்வுகளை புறந்தள்ளுகிறாரா ஜனாதிபதி?

இலங்கை சிறையில் அரசியல் கைதிகளாக வருடக்கணக்கில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது உறவுகளை நினைத்து தமிழ் மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கையில், ஜனாதிபதி மைத்திரி வடக்கு மாகாணத்தின் பல நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளமை வேதனையளிக்கின்றதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கிற்கு நாளை (சனிக்கிழமை) விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி மைத்திரி, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளார். இது குறித்து கருத்துத் தெரிவித்த போதே, சிறிதரன் மேற்குறித்தவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் செயற்பாடானது, தமிழ் மக்களின் உரிமைக் குரலுக்கு செவிசாய்க்காத தன்மையையே எடுத்துக்காட்டுவதாகவும் சிறிதரன் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தில் உரிய நடவடிக்கை எடுக்கும் வரை ஜனாதிபதி பங்கேற்கும் எந்த நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளப் போவதில்லையென சிறிதரன் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்