வவுனியாவில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்

வவுனியாவில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தினை காணாமல் போனவர்களின் உறவுகளினால் இன்று வவுனியா கந்தசுவாமி கோவிலில் முன்னெடுத்துள்ளனர்.

கடந்த 233 நாட்களாக தமது உறவுகளின் விடுதலைக்காக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடும் காணமல் போனவர்களின் உறவுகளினால் முன்னெடுக்கும் இவ் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டமானது, கடந்த பத்தொன்பது நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடும் அரசியல் கைதிகளிற்கு ஆதரவாகவும், அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும், காணமல் போனவர்களிற்காகவும் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்