தேனிலவின்போது உயிரிழந்த புதுப்பெண்..!!

ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் சேஸ் மற்றும் கெல்லி கிளார்க். சமீபத்தில்தான் திருமணம் முடிந்த இருவரும் ஓசினியா நாட்டிற்கு தேனிலவு கொண்டாட சென்றனர். தேனிலவு கொண்டாட்டத்தின்போது இரவில் கெல்லிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது.
சாதாரண வயிற்று வலிதானே என்று இருவரும் இரவு இருந்து விட்டனர். அடுத்த நாள் காலையில் கெல்லிக்கு பயங்கர காய்ச்சல் ஏற்பட்டது. உடனடியாக கெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டைபாய்டு நோய் தாக்கியது தெரியவந்தது.
சிகிச்சையின் போது கெல்லி திடீரென கோமா நிலைக்கு சென்றார். தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்தபோதும் கோமா நிலையிலேயே உயிரிழந்தார். இது கணவர் சேஸ்சுக்கு அதிர்ச்சியை அளித்தது. இது குறித்து அவர் கூறும்போது, கெல்லி மிகவும் அழகானவர்.
அவரால் எனது எதிர்கால வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் இவ்வாறு நடந்தது எனது வாழ்க்கையே இருட்டி விட்டது போல ஆகி விட்டது. எனது மனைவி இறந்து விட்டாள் என்பதை இப்பேது வரை என்னால் நம்ப முடியவில்லை என்கிறார் கண்ணீருடன்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்