பள்ளி மீது மர்ம நபர்கள் தாக்குதல் – இரு சிறுமிகள் உள்பட 6 மாணவர்கள் பலி 

மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரு சிறுமிகள் உள்பட 6 மாணவர்கள் உயிரிழப்பு.

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யா பள்ளியில் இன்று மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரு சிறுமிகள் உள்பட 6 மாணவர்கள் உயிரிழந்தனர்.
பள்ளி மீது மர்ம நபர்கள் தாக்குதல் – இரு சிறுமிகள் உள்பட 6 மாணவர்கள் பலி
தெற்கு சூடான் – சோமாலியா நாட்டையொட்டியுள்ள கென்யாவில் மாடு மேய்ப்பது போன்ற சிறிய தகராறுகளில் கூட வெடிகுண்டு மற்றும் துப்பாக்கிகளால் தாக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கென்யாவின் வடபகுதியில் உள்ள ரிட் சமவெளி மாகாணத்துக்குட்பட்ட டுர்க்கானா என்ற இடத்தில் உள்ள பள்ளியின் மீது இன்று மர்ம நபர்கள் துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இரு சிறுமிகள் உள்பட 6 மாணவர்கள் உயிரிழந்ததாக டுர்க்கானா கவர்னர் ஜோஸ்பாட் நானாக் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்