பாகிஸ்தானில் போட்டியை நடத்த வேண்டாம் – ஸ்ரீலங்கா வீரர்கள் கோரிக்கை

பாகிஸ்தான் அணிக்கெதிராக இடம்பெறவுள்ள 3 ஆவதும் இறுதியுமான இருபதுக்கு இருபது ஓவர்கள் கொண்ட போட்டியை பாகிஸ்தானின் லாகூர் நகரில் நடத்த வேண்டாமென ஸ்ரீலங்கா அணி வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுமார் 40 வீரர்கள் இணைந்து இது தொடர்பிலான கடிதத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அததுடன், குறித்த கடித்தில், இந்த போட்டியை வேறு ஒரு மைதானத்திற்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கை தொடர்பில் ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனத்தின் மத்திய செயற்குழு, நாளைய தினம் தீர்மானிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு லாகூர் நகரில் ஸ்ரீலங்கா அணி வீரர்கள் பயணித்த பேருந்து மீது ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தியிருந்தனர்.

இதனையடுத்து, பாகிஸ்தானில், சர்வதேச கிரிக்கட் போட்டிகள் நடை பெறவில்லை.

பாகிஸ்தானில் போட்டியை நடத்த வேண்டாம் - ஸ்ரீலங்கா வீரர்கள் கோரிக்கை

பாகிஸ்தானில் போட்டியை நடத்த வேண்டாம் - ஸ்ரீலங்கா வீரர்கள் கோரிக்கை

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்