பாதத்தில் உள்ள வெடிப்பை போக்கும் வழிகள்?

குதிகாலில் உண்டாகும் வெடிப்பு பாதங்களின் அழகை கெடுப்பது மட்டுமின்றி அதிக வலியையும் ஏற்படுத்தும். இதோ சில எளிய டிப்ஸ்கள்,

ஆலிவ் ஆயிலை கொண்டு பாதங்களை 15 நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்து, வெளியில் செல்லும் போது பாதங்களுக்கு சாக்ஸ் அணிந்து கொண்டால், விரைவில் நல்ல பலனைக் காணலாம்.

பப்பாளி பழத்தை நன்கு அரைத்து அதை வெடிப்பு உள்ள இடத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து பாதத்தை நீரில் நனைத்து மறுபடியும் அரைத்த பப்பாளியை தேய்த்து வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

மருதாணி இலைகளை நன்றாக அரைத்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விட்டு தண்ணீரில் கழுவி வந்தால், பித்த வெடிப்பு மறையும்.

மிதமான சூடுள்ள நீரில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து அதில் பாதத்தை சிறிது நேரம் ஊறவைத்து, சொரசொரப்பான பிரஷை கொண்டு தேய்த்து கழுவ வேண்டும்.

வேப்பிலை, மஞ்சள் மற்றும் சிறிதளவு சுண்ணாம்பு ஆகிய அனைத்தையும் சேர்த்து அரைத்து, அதனுடன் விளக்கெண்ணெய் கலந்து வெடிப்பு உள்ள இடத்தில் தடவி வந்தால் வெடிப்பு நீங்கும்.

விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய்யை சம அளவில் கலந்து அதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல, பாதத்தில் வெடிப்பு உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்