பால் குடிக்க மறுத்த குழந்தையை வீட்டிற்கு வெளியே அனுப்பிய அமெரிக்க நபர்.

பால் குடிக்க மறுத்த குழந்தையை தண்டிக்கும் வகையில் வீட்டிற்கு வெளியே தந்தை விட்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் டெக்ஸாசை சேர்ந்த வெல்சே மேத்யூ என்பவர் இந்தியாவை சேர்ந்த ஆதரவற்றோர் இல்லத்திலிருந்து ஷெரீன் என்ற 3 வயது இந்திய குழந்தையை தத்தெடுத்து சென்று வளர்த்து வந்தார். இந்நிலையில் ஷெரீன் கடந்த 7 -ம் தேதி பால் குடிக்க மறுத்து அடம்பிடித்ததால் கோபமடைந்த மேத்யூ, குழந்தை ஷெரீனை வீட்டிற்கு வெளியே கொண்டு சென்று விட்டுவிட்டு இவர் மட்டும் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார்.

இதனிடையே அதிகாலை 3 மணிக்கு குழந்தை மாயமாகியும் இரவு 8 மணி வரையிலும் மேத்யூ காவல் துறையிடம் புகார் அளிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இதனால் மேத்யூ மீது சந்தேகமடைந்த காவல் துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குழந்தைக்கு ஆபத்து ஏற்படுத்தியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்