தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்.

அனுராதபுரம் சிறைச்சாலைக்கு தமிழ் அரசியல் கைதிகள் மாற்றப்பட்டதை தொடர்ந்து, தமிழ் அரசியல் கைதிகள் மேற்கொண்டு வரும் போராட்டத்துக்கு ஆதரவாகவும், தமிழ் அரசியல் கைதிகளுக்கு உடனடி தீர்வினைகோரியும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை சற்று முன்னர் ஆரம்பித்துள்ளனர்.

அனுராதபுரம் சிறைச்சாலையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இராசதுரை திருவருள் (வயது 40) கரணவாயை சேர்ந்த மதியரசன் சுலக்ஸன் (வயது 30) நாவலப்பிட்டியை சேர்ந்த கணேசன் தர்சன் (வயது 26) ஆகியோர் கடந்த 25 ஆம் திகதியில் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இவர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றக்கோரி யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் தமது உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்