முகம் பளிச்னு இருக்கணும்னா கற்றாழை ஜெல்லை இப்படித்தான் யூஸ் பண்ணணும்…

சிறிது கற்றாழை ஜெல்லுடன் சிறிது எலுமிச்சை ஜூஸ் கலந்து முகம் மற்றும் கழுத்தில தடவி 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

கற்றாழை ஜெல்லுடன் ரோஸ்வாட்டர் கலந்து முகத்தில் பூசி, 15 நிமிடங்கள் மசாஜ் செய்து கழுவ வேண்டும். இதனால் சருமம் இளமையாகத் தோன்றும்.

கற்றாழையின் ஓரங்களில் உள்ள கூர்மையான முள்ளை வெட்டிவிட்டு, நீரில் போட்டு நன்கு வேகவைக்க வேண்டும். அதை எடுத்து சிறிது தேன் சேர்த்து அப்ளை செய்யவும். மிகச்சிறந்த மாற்றத்தைக் காண்பீர்கள்.

சென்சிடிவ் சருமமாக இருந்தால் கற்றாழையுடன் தயிர், வெள்ளரிச்சாறு ஆகியவற்றைச் சேர்த்து பயன்படுத்த வேண்டும்.

வறட்சியான சருமமாக இருந்தால் கற்றாழையுடன் வெள்ளிரிக்காய், பேரிச்சம்பழம், லெமன் சேர்த்து அரைத்துப் பயன்படுத்த வேண்டும்.

கற்றாழையுடன் மாம்பழ கூழ் சேர்த்து அப்ளை செய்து வந்தால் முகம் ஜொலிக்கும்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்