ஸ்பெய்ன் மற்றும் போர்த்துக்கல்லில் காட்டுத் தீ – 35 பேர் பலி

ஸ்பெய்ன் மற்றும் போர்த்துக்கல்லில் மிக தீவிரமாக பரவிவரும் காட்டுத்தீ காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 50க்கும் அதிகமானவர்கள் எரிகாயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஸ்பெய்ன் மற்றும் போர்த்துக்கல்லில் காட்டுத் தீ - 35 பேர் பலி

இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் 15 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்த காட்டுத்தீயினால் பலர் காணாமல் போயுள்ளதாகவும் அவர்களைத் தேடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

போர்த்துக்கல்லிலும் ஸ்பெய்னிலும் கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல் காட்டுத்தீ மிக வேகமாகப் பரவி வருகிறது.

கடந்த இரண்டு நாட்களாக பரவி வரும் தீயில் சிக்கி 35 பேர் உயிரிழந்துள்ளனர்.

தீயை அணைப்பதற்காக தீயணைப்புப் படை வீரர்கள் சுமார் ஆயிரம் பேர் வரை கடமையில் ஈடுபடுத்தப்படடுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் வேகமாக பரவி வரும் இந்த தீயை கட்டுப்படுத்துவதற்கு அவர்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் நிலவும் வரட்சியான காலநிலை மற்றும் அதிகூடிய வெப்பநிலையே இந்த திடீர் தீ பரவலக்கு காரணம் என அந்நாடடு அரசாங்கம் அறிவித்துள்ளதுடன், போர்த்துக்கல்லில் அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்பெய்ன் மற்றும் போர்த்துக்கல்லில் காட்டுத் தீ - 35 பேர் பலி

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்