மன்னார் எமில்நகர் பூண்டிமாதா முன்பள்ளியினால் முன்னெடுக்கப்பட்ட சிறுவர் தினம்

 

 

சிறுவர், ஆசிரியர் தினத்தினை எமது முன்பள்ளியின் சுற்றுலாவுடன் இணைத்து அதனை 15.10.2017 ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு முகாமைத்துவக்குழு, ஆசிரியர்கள், பெற்றோர், சிறுவர்களுடன் இணைந்து பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வு எல்லோராலும் வியக்கும் வண்ணம் இருந்ததுடன். இந்நிகழ்வு முற்றுமுழுதாக முகாமைத்துவ குழுவாலும், பெற்றோரினால் ஏற்பாடு செய்யப்பட்டு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. எமது சிறார்கள் மிகவும் சந்தோசத்துடன் காணப்பட்டனர். சுற்றுலாவில் சங்குப்பிட்டி பாலம், பாசையூர் புனித அந்தோனியார் ஆலயம், குருநகர் புனித மரியாள் போராலயம், கொழும்புத்துறை புனித சவேரியார் குருமடம், யாழ்பாண கோட்டை, பூங்கனிச் சோலை போன்றவற்றை பார்வையிட்டு பின் சாட்டி என்ற இடத்தைப் பார்வையிட்டு பின் அங்கே ஆசிரியர், சிறுவர் தினம் சிறப்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், ஆசிரியர்கள் மாலை அணிவிக்கப்பட்டு பெற்றோர்களினால் அழைத்துவரப்பட்டு ஆராத்தி எடுத்து பெற்றோரினால் பூச்செண்டு கொடுக்கப்பட்டு ஆசிரியர்களும், அழைக்கப்பட்டவர்களும் வரவேற்கப்பட்டனர். அதே போன்று சிறுவர்களும் கௌரவிக்கப்பட்டதுடன் ஆசிரியர்களுக்கும், சிறுவர்களுக்கும் நினைவு பரிசில்கள் வழங்கி, மிகவும் சிறப்பாகவும், மகிழ்வாகவும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இம்முன்பள்ளி இயங்குவதற்கு வசதிகளற்ற நிலையிலும் இந்நிகழ்வினை நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்