உள்ளத்தின் ஞான ஒளியை இல்லாமல் செய்துவிடாமல், சமாதானத்துடனும் ஒற்றுமையுடனும் வாழ்வது அனைவரதும் பொறுப்பாகும்: பிரதமர் ரணில்

ranilw-e1432288993805

தனது உள்ளத்தின் ஞான ஒளியை இல்லாமல் செய்துவிடாமல், சமாதானத்துடனும் ஒற்றுமையுடனும் வாழ்வது அனைவரதும் பொறுப்பாகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, மனிதன் தனது தனிப்பட்ட நோக்கங்களை மாத்திரமே அடைந்து கொள்ளாமல், பிறர் நன்மை தொடர்பிலும் அக்கறை கொள்ள வேண்டும் என்பதை தீபாவளி உணர்த்தி நிற்கின்றது. அந்த வகையில், சகல இன மக்களுடனும் ஐக்கியத்துடன் வாழ்வது இன்றியமையாததாகுமென பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு வெறுப்பினை ஒழித்து, சுயாதீனத்தை மேலோங்கச் செய்யும் இந் நன்னாளில், உலக வாழ் இந்து மக்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்