பஸ் – வேன் விபத்து

(க.கிஷாந்தன்)

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை வட்டகொடை பகுதியில் 20.10.2017 அன்று காலை 6.40 மணியளவில் தனியார் பஸ் மற்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

தலவாக்கலை – பூண்டுலோயா பிரதான வீதியில் வட்டகொடை பகுதியிலிருந்து தலவாக்கலை நோக்கிச் சென்ற வேன் ஒன்றும் தலவாக்கலையிலிருந்து கண்டி பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த பஸ் ஒன்றும் வட்டகொடை தோட்டப் பகுதியில் இவ்வாறு மோதிவிபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும், பஸ் சாரதியின் கவனயீனம் காரணமாக இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இவ்விபத்துடன் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்