சவுக்கடி இரட்டைக் கொலையைக் கண்டித்து ஆறுமுகத்தான்குடியிருப்பில் ஆர்ப்பாட்ட பேரணி…

 

மட்டக்கள்பபு சவுக்கடி இரட்டைக்கொலை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனை வழங்குமாறு கோரி இன்று (20) வெள்ளிக்கிழமை ஆறுமுகத்தான்குடியிருப்பில் ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றது.

குடியிருப்பு கலைமகள் வித்தியாலய சமூகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியில் மாணவர்கள் ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் பாடசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் அரசியல் பிரமுகர்கள் என பலரும் கருந்துகொண்டனர்.

பாடசாலை முன்றலில் ஒன்றுகூடிய ஆர்ப்பாட்டகாரர்கள் பிரதான வீதியூடாக சென்று வாசிகசாலை முன்றலில் தமது கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏற்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சவுக்கடி முருகன் கோயில் வீதியைச் சேர்ந்த மதுவந்தி பீதாம்பரம் (வயது 26) மற்றும் அவரது மகனான பீதாம்பரம் மதுஷ‪ன் (வயது 11) ஆகியோர் செவ்வாய்கிழமை (17.10.2017) இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இவர்களில் 11 வயதுடைய மதுஷன் குறித்த பாடசாலையில் தரம் 6ல் கல்விபயிலும் மாணவனாவான்.

குறித்த படுகொலையினை கண்டித்தும் குற்றவாளிகள் விரைவாக கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் நிறுத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்