காரமான மிளகாய்களை சாப்பிடும் போட்டி

பிரித்தானியாவில் கிளிப்டன் மிளகாய் கிளப் மிக பிரபலமானது இங்கு மிளகாய் செடிகள் அதிகளவில் வளர்க்கப்படுவதோடு மிளகாய் சாப்பிடும் போட்டிகளும் நடத்தப்படுகிறது.இந்த போட்டியில் ஒவ்வொரு சுற்றுக்கும், மிளகாயின் காரம் அதிகரிக்கப்படும். இதில் ஒவ்வொரு சுற்றிலும் ஜெயித்து கடைசி சுற்றை அடைவது மிக கடினமாகும்.
ஆனால், 2014-ம் ஆண்டிலிருந்தே சிட் பார்பர் என்ற பெண் இப்போட்டியில் தொடர்ந்து ஜெயித்து வருகிறார்.அதிக காரத்தை சாப்பிடுகிறவர்கள் எல்லாம் இந்தப் போட்டியில் எளிதாக வென்றுவிட முடியும் என்று சொல்லிவிட இயலாது.ரெட் ப்ரெஷ்னோ, ஜலபெனோ என்று அழைக்கப்படும் மிக காரமான மிளகாய் வகைகளை சாப்பிட்டால் மட்டுமே போட்டியின் அடுத்தகட்டத்திற்கு செல்ல முடியும்.
இறுதிப் போட்டிக்கு முன்னேறுபவர்களுக்கு உலகிலேயே மிகக் காரமான ‘கரோலினா ரீப்பர்’ மிளகாய்கள் வழங்கப்படும்.இதையும் சாப்பிட்டு முடிக்கும் வெற்றியாளருக்கு 4,500 ரூபாய் பரிசு வழங்கப்படுகிறது.இது குறித்து சிட் பார்பர் கூறுகையில், மிளகாய் சாப்பிடும்போது காரத்தைத் தாங்க முடியாமல் தண்ணீர் குடித்தால், போட்டியிலிருந்து நீக்கப்படுவார்கள்.
காரத்தைத் தணிக்க பாலைக் குடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நான் வேகமாக மிளகாய்களைச் சாப்பிட்டுவிடுவேன்.பரிசு தொகை இப்போட்டியில் குறைவு தான். ஆனால் சவால்களை விரும்புகிறவர்களும், வலி தாங்ககூடியவர்களும் இப்போட்டியில் திறமையை வெளிப்படுத்த முடியும் என கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்