குதிரையுடன் ஹொட்டல் அறையில்… கனடா பெண்ணின் சோதனை

அமெரிக்கா அரசின் கொள்கைப்படி மக்கள் தங்கள் செல்லப் பிராணிகளுடன் ஹொட்டல் அறையில் தங்கிக் கொள்ளலாம்.

இதனை பரிசோதிக்க விரும்பிய கனடிய குதிரைப் பயிற்சியாளர் லிண்ட்சே பார்ட்ரிட்ஜ், தனது குதிரையை அழைத்துக்கொண்டு கெண்டகியில் ஹொட்டலுக்கு சென்றார்.

தனக்கும் தனது குதிரைக்கும் ஓர் அறை வேண்டும் என அவர் கேட்டபோது, ஆச்சரியமடைந்த வரவேற்பாளர் குதிரையை காட்டினால் அறை தருகிறோம் என்று கூறினர்.

உடனே லிண்ட்சே, குதிரையை காட்டியதும் அறை ஒதுக்கப்பட்டது.

இதுகுறித்து லிண்ட்சே கூறுகையில், ‘அமெரிக்க அரசின் கொள்கை எந்த அளவில் நடைமுறையில் உள்ளது என்பதை அறியவே இவ்வாறு செய்தேன்.

வாடகை அதிகம் இருக்கும் என நினைத்தேன், ஆனால் குறைந்த வாடகையே பெற்றுக் கொண்டனர். குதிரையுடன் சாப்பிட்டு விட்டு, சில புகைப்படங்களை எடுத்த பின்னர் செல்லப் பிராணிகளுக்கான இடத்தில் அதனை கட்டி விட்டேன்.

மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் அறை வழங்கியதை நினைத்து மகிழ்ச்சி அடைந்தேன் என தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்