2025 ல் விண் கல்லில் ஆளை இறக்க நாசா திட்டம்

 

X3 திரஸ்டர் என்னும் புதுவகையான 5ம் தலை முறை எஞ்சின் ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். இதுவரை பூமியில் இருந்து விண்ணுகு செல்ல. மற்றும் விண்ணில் பயணிக்க, எரி பொருளை தான் பயன்படுத்தினார்கள். ஆனால் முதல் தடவையாக, ஒரு வகையான காந்த புலத்தோடு கலந்த பிளாஸ்மா கதிகளை பயன்படுத்தி, ஈர்ப்பு விசையில் இருந்து வேகமாக விலகிச் செல்லக் கூடிய அதி சக்த்தி வாய்ந்த எஞ்சினை கண்டுபிடித்துள்ளார்கள்.

இதனை பொருத்துவதன் மூலம். அவர்கள் செய்யும் விண்கலம், எரி பொருள் இன்றி விண்ணில் படு வேகமாக பயணிக்க வல்லதாக மாறுகிறது. இதனை 2025ல் பாவித்து, விண் கல் ஒன்றில் சிறிய விண் கலத்தை இறக்க நாசா திட்டமிட்டுள்ளது. இது சரி வரும் என்றால், 2030ம் ஆண்டு அதாவது இன்னும் 12 வருடங்களில் செவ்வாய் கிரகத்திற்கு மனிதரை அனுப்ப இந்த உந்து சக்தியை நாசா பயன்படுத்த உள்ளது. இதனால் அவர்கள் பயணிக்கும் விண் கலம் பல ஆண்டுகள் பயணிக்க தேவை இல்லை. மாறாக சில மாதங்களில் அவர்கள் செவ்வாய் கிரகத்தை அணுகி விடுவார்கள்.

இது போன்ற தொழில் நுட்பத்தை கொண்ட விண் கலங்களை நாம் சினிமா படங்களில் தான்  பார்த்திருக்கிறோம். ஆனால் அது இன்று நிஜமாக நடக்கிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்