கிளிநொச்சியில்  நீண்ட நாட்களின் பின் தொடர் மழை.

கிளிநொச்சியில் பல பாகங்களிலும் மூன்று நாட்களாக கடும் இடி மின்னலுடனான பெருமழை பொழிந்துள்ளது. இதனால் மாவட்டத்தின் நீர் நிலைகள் சடுதியாக உயர்ந்துள்ளது.
காலநிலை மாற்றத்தினால் பருவப்பெயர்ச்சி ஆரம்பித்துள்ள நிலையில் வடக்கு உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களிலும் கனமழை பொழிந்து வருகிறது.
இந்த நிலையில் மூன்று நாட்கள் பெய்த கடும் மழையில் 100 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளது. கிளிநொச்சி உள்ள குளங்கள் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக இரணைமடு குளத்தில் 7 அடியாக இருந்த நீர் சடுதியாக 13 அடியாக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்க விடையமாகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்