ஐ.டி. துறையில் தொடரும் பணியிழப்புகள்!!!!

இந்திய ஐ.டி. துறையில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக

பணியிழப்புகள் அதிகமாக நடந்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. தகவல் தொழில்நுட்பத் துறையில் அதிகரித்து வரும் தானியங்கி மயம், கிளவுட் கம்ப்யூட்டிங் போன்ற காரணங்களால் தான் பணியிழப்புகள் அதிகரித்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐ.டி துறையில் காரணமின்றி பணியிழப்புகள் அதிகரித்து வருவதாகவும், அதை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் ஐ.டி. பணியாளர்கள் மன்றத்தின் சார்பில் அரசிடம் கோரிக்கையும் வைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான அரையாண்டில் முக்கிய ஐ.டி நிறுவனங்களாகக் கருதப்படும் டி.சி.எஸ்., இன்ஃபோசிஸ், விப்ரோ, ஹெச்.சி.எல்., டெக் மஹிந்த்ரா, காக்னிசன்ட் உள்ளிட்ட நிறுவனங்களில் உள்ள மொத்த பணியிடங்களில் 4,157 பணியிடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. காக்னிசன்ட் நிறுவனத்தில் பணியாளர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 2,61,200 ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை செப்டம்பரில் 2,56,100 ஆகக் குறைந்துள்ளது. இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் மார்ச் மாதம் 2,00,364 ஆக இருந்த பணியாளர்களின் எண்ணிக்கை செப்டம்பரில் 1,98,440 ஆகக் குறைந்துள்ளது.

விப்ரோவில் மார்ச் மாதம் 1,65,481 ஆக இருந்த பணியாளர்களின் எண்ணிக்கை செப்டம்பரில் 1,63,759ஆகக் குறைந்துள்ளது. டெக் மஹிந்த்ராவில் மார்ச் மாதம் 1,17,693 ஆக இருந்த பணியாளர்களின் எண்ணிக்கை செப்டம்பரில் 1,17,225 ஆகக் குறைந்துள்ளது. டி.சி.எஸ் நிறுவனத்தில் மார்ச் மாதத்தோடு ஒப்பிடும்போது செப்டம்பரில் பணியாளர்களின் எண்ணிக்கை 1,990 அதிகரித்துள்ளது. அதேபோல ஹெச்.சி.எல் நிறுவனத்திலும் மார்ச் மாதத்தோடு ஒப்பிடும்போது செப்டம்பரில் பணியாளர்களின் எண்ணிக்கை 3,067 அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக மார்ச் மாதத்தில் இந்த நிறுவனங்களில் இருந்த பணியாளர்களின் எண்ணிக்கை 12,47,934 ஆக இருந்தது. தற்போது 4,157 பணியிடங்கள் குறைந்து 12,43,77 ஆக உள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்