சாய்ந்தமருது மர்யம் பாத்திமா ஜெஸீம் கனடா சர்வதேச போட்டிகளில் வெற்றி

சாய்ந்தமருது மர்யம் பாத்திமா ஜெஸீம் கனடா சர்வதேச போட்டிகளில் வெற்றி
(அஸ்லம் எஸ்.மௌலானா)
கனடா நாட்டை தலைமையகமாகக் கொண்டியங்கும் “முஸ்லீம்  வில்லே” (Muslim Ville) என்ற அரசசார்பற்ற தன்னார்வத்தொண்டர்கள் அமைப்பு, வளர்ந்து வரும் இஸ்லாமிய சிறார்களிடையே அல்குர் ஆன் மற்றும் இஸ்லாமிய அறிவை மேம்படுத்துத்தும் நோக்குடன்  சர்வதேச ரீதியில் வருடாந்தம் நடாத்தி வரும் 16ஆவது ஆண்டுக்கான போட்டித் தொடரில் ஐந்து வயதுக்குரிய சிறார்களுக்கான அல்குர்ஆன் சூராக்கள் மனனமிட்டு  இராகத்துடன் ஓதிக் காண்பித்தல் மற்றும் இஸ்லாமிய அறிவுக்களஞ்சிய வினா விடைப் போட்டிகளில் ஐக்கிய ராஜ்ஜியத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பங்குகொண்ட செல்வி மர்யம் பாத்திமா ஜெஸீம் இரு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளார்.
இவ்விரு போட்டிகளிலும் கலந்த கொண்ட மர்யம் பாத்திமா ஜெஸீம் அல்குர்ஆன் மனனமிடல் மற்றும் முரத்தல் போட்டியில் மூன்றாம் இடத்தையும் இஸ்லாமிய அறிவுக்களஞ்சிய வினா-விடைப் போட்டியில் விசேட நிலையையும் பெற்று சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கபட்டுள்ளார்.
லண்டனில் வசித்து வரும் சாய்ந்தமருதைச் சேர்ந்த சுயதொழில் முயட்சியாண்மையாளரும் கல்வியலாளருமான ஜெஸீம் அப்துல் ஹமீட், ஸாதிகா தம்பதியினருக்கு ஐக்கிய இராஜ்ஜியத்தில் பிறந்த செல்வி மர்யம் பாத்திமா, டைனி பீட் (Tiny Feet), ஒலிவர் தோமஸ் (Oliver Thomas), மில்டன் கீன்ஸ் கல்லூரி (Milton Keynes College) முனபள்ளி பாடசாலைகளில் பயின்றதுடன், இலங்கையில் தங்கியிருந்த காலப் பகுதியில் தனது தந்தை ஜெஸீம் அப்துல் ஹமீட் அவர்களின் முயற்சியில் கல்முனை  பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்ட “பிரித்தானிய இஸ்லாமிய பாடசாலை” ( British Islamic School) யின் ஸ்தாபக மாணவராகி, தவிர்க்க முடியாத சூழ் நிலைகளை எதிர் கொண்டு தந்தையின் அரவணைப்பிலும், வழிகாட்டல் மூலமும் வதிவிட கற்பித்தல் மூலம் தனது முன் கல்வியைத்தொடர்ந்து இந்த போட்டிகளை வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வெற்றியின் மூலம் ஐக்கிய ராஜ்ஜியத்தின் தவ்வாதுல்  இஸ்லாம் அமைப்பின் “எக்ஸெல்” (The Exell Award) எனப்படும் 2017ஆம் ஆண்டின் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்