உலக ஊக்க மருந்து தடுப்பு அமைப்பின் சட்டங்களை பின்பற்ற மறுக்கும் இந்திய கிரிக்கட் சபை

விளையாட்டு வீரர்கள் வெளிப்படைத் தன்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக உலக ஊக்க மருந்து தடுப்பு அமைப்பு பல்வேறு விதிமுறைகளை விதித்துள்ளது. அந்த வதிமுறைக்கு உட்பட்டு வீரர்கள் செயல்பட வேண்டும். இல்லையெனில் தடைக்கு உள்ளாவார்கள்.

இந்த அமைபின் விதிமுறைகளை அனைத்து நாடுகளும் கடைபிடித்து வருகிறது. இந்தியாவின் தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு (NADA) வீரர்களுக்கு பரிசோதனை செய்து வருகிறது. மல்யுத்தம், குத்துச்சண்டை உள்பட எல்லா விளையாட்டுக்களும் இதில் அடங்கியுள்ளது.

இந்த விதிமுறைக்குள் வரை இந்திய கிரிக்கெட் சபை மறுத்து வந்தது. ஆனால், இந்திய விளையாட்டுத்துறை இந்திய வீரர்களுக்கும் சோதனை நடத்த வேண்டும். இந்தியாவில் தொடர் நடைபெறும்போது வீரர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். இதற்கு பிசிசிஐ மறுப்பு தெரிவித்தால், அதன்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தது.

இந்நிலையில் கிரிக்கெட் ஒரு தேசிய விளையாட்டு பெடரேசன் கிடையாது. அது தன்னாட்சி அமைப்பு. உலகளவில் கிரிக்கெட்டை நிர்வகிக்கும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இணைந்து செயல்படுகிறது. நாடாவின் அதிகார வரம்பிற்குள் இது வராது. பிசிசிஐ-க்கான விதிமுறைகள் மற்றும் ஒழுங்கு முறைகளை ஐ.சி.சி.தான் உருவாக்கி செயல்படுத்த முடியும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்