ஐஸ்க்ரீமை கொள்ளையடிக்கும் அழகிய திருடர்கள் (புகைப்படங்கள் இணைப்பு)

நம் அக்கம் பக்கத்தில் வசிக்கும் காக்கா குருவிகள் போன்ற பறவைகள் வீட்டு மொட்டைமாடியில் காய வைத்துள்ள உணவுப் பொருட்களை ஆட்டையைப் போடும் காட்சியைப் பார்த்து இருப்போம். ஆனால் ஐஸ்க்ரீமை மட்டுமே குறி வைத்து வழிப்பறி செய்யும் பறவையை பார்த்தது உண்டா?.

சீகல் என்ற கடற்பறவைகள் தான் இப்படி ஐஸ்க்ரீம் சுவைக்கு மயங்கி கடற்கரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் ஐஸ்க்ரீமை வழிப்பறி செய்யும் செயலை செய்கின்றன. அதுவும் இந்த பறவைகள் ஐஸ்க்ரீமை, வைத்திருப்பவர்களுக்கு தெரியாமல் எல்லாம் எடுப்பது இல்லை. ஐஸ்க்ரீமை அவர்கள் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போதே வந்து பிடுங்கி செல்கின்றன.

இந்த பறவைகள் இப்படி துணிச்சலாக கொள்ளையடிப்பதையும் ஐஸ்க்ரீமை பறி கொடுத்தவர்கள் பேந்த பேந்த முழிப்பதையும் பார்க்க அழகாகத்தான் உள்ளது.

இந்த பறவைகள் எவ்வளவு திறமையாக அழகாக வழிப்பறி செய்கின்றன என்பதை கீழே உள்ள 10 புகைப்படங்களில் பாருங்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்