ஹார்வார்ட்பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவுவதற்கு தமிழக அரசு அளித்த நன்கொடையைக்கனடியத்தமிழர் பேரவை பாராட்டுகின்றது

கனடியத் தமிழர் பேரவை
  நவம்பர் 112017.

ஹார்வார்ட்பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவுவதற்கு தமிழக அரசு அளித்த நன்கொடையைக்கனடியத்தமிழர் பேரவை பாராட்டுகின்றது

உலகின்தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை நிறுவுவதற்கு பத்துக் கோடி இந்திய ரூபாயை வழங்க ஒப்புதல் அளித்தமைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களையும்தமிழக அரசையும் கனடியத் தமிழர் பேரவை மனதாரப் பாராட்டுகின்றது.

ஐக்கிய அமெரிக்கவைச் சேர்ந்த மருத்துவர்களான திரு.விஜய்ஜானகிராமன்மற்றும்திரு.சு. சம்பந்தம் ஆகியோர் தலா $500,000 இணை வழங்கி இச்செயற்றிட்டத்திற்கு வித்திட்டுள்ளார்கள். இதற்கு ஆதரவளிக்கும் முகமாக, கனடியத் தமிழர்பேரவையும், நிரோ கிரியேஷன்ஸ்ஊடாக ஜக்னசெனி எனும்இ சைநடனத்தையும்அக்னி இசைக்குழுவின்ஊடாக இசை நிகழ்ச்சியையும்நடத்தி $65,000க்கும்கூடுதலான நன்கொடையைக்கையளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்குஆறு மில்லியன் அமெரிக்க வெள்ளி தேவைப்படுகின்றது. இதில் நாலரை மில்லியன் வரையான பணம்உறுதியாகி அல்லது பெறப்பட்டு விட்டது. மீதமுள்ள ஒன்றரை மில்லியனைப் பெறும் முயற்சியில் தமிழ் இருக்கை ஒருங்கிணைப்புக் குழு முழுமூச்சாக ஈடுபட்டுள்ளது.இத்தருணத்தில், உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் தமிழ் இருக்கை நிறுவுவதில் பங்களிக்கும் அரிய வாய்ப்புக் கிடைத்துள்ளது. நீங்கள் வழங்கும் இவ்வுதவி தமிழ்மொழியின்இருக்கையை உறுதி செய்வதோடு, உங்களுக்கும் உங்கள் வருங்கால சந்ததிக்கும் பெருமை தருவதாக அமையும்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்