சஸ்பென்சை உடைக்கிறார் நடிகர் விக்ரம்

சேது படம் மூலம் விக்ரமின் சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தி வைத்தவர் டைரக்டர் பாலா. அதன்பிறகு பாலா இயக்கத்தில் நடித்த பிதாமகன் படத்திலும் மாறுபட்ட ரோலில் நடித்தார் விக்ரம். இந்த நிலையில், விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்கும் வர்மா படத்தையும் பாலா இயக்குவது எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.

தெலுங்கில் வெளியான அர்ஜூன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கான இந்த வர்மா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ள நிலையில், படத்தில் நாயகியாக நடிப்பது யார் என்பது இன்னும் உறுதிப்படுத்தப் படவில்லை. தெலுங்குப்பதிப்பில் ஷாலினி பாண்டே நடித்திருந்த நிலையில், தமிழில் ஸ்ரேயா சர்மா நடிக்கயிருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

ஆனால் அதை வர்மா படக்குழு இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இந்த நிலையில், நவம்பர் 12-ந்தேதியான இன்று மதியம் 12 மணிக்கு வர்மா பட நாயகி யார் என்கிற சஸ்பென்சை விக்ரம் உடைக்கயிருப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது. மேலும், இந்த வர்மா படம் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு செய்திகளையும் ஆரம்பத்தில் இருந்தே தனது இணைய பக்கத்தில் விக்ரம் வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்