பிக் பொஸ் புகழ் நடிகருக்கு வந்த வாய்ப்பு!

பிக் பொஸ் புகழ் நடிகருக்கு வந்த வாய்ப்பு!


பிக் பொஸ் புகழ் கணேஷ் வெங்கட்ராம் ‘மை ஸ்டோரி’ எனும் மலையாளப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழில் ஒளிபரப்பான பிக் பிஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலருக்கும் சினிமாவில் நல்ல வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. அந்தவகையில், ஓவியாவை அடுத்து ஹரிஷ் கல்யாண், ரைசா, ஆரவ், ஜூலி போன்றோருக்கு இவ்வாறு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில்,ரோஷினி தினகர் இயக்கும் ‘மை ஸ்டோரி’ எனும் மலையாளப்படத்தில் பிருத்விராஜ், பார்வதி ஆகியோருடன் கணேஷ் வெங்கட்ராம் நடிக்கவுள்ளார்.

பிக் பொஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, கணேஷ் வெங்கட்ராமின் உண்மைத்தன்மை பிடித்துப் போகவே இந்தத் திரைப்படத்தில் அவரை இணைத்துக் கொண்டதாக இயக்குநர் ரோஷினி தினகர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்