காதலி உடலில் தீ பற்றியதும் தப்பி ஓடிய காதலன்..!!!

செஞ்சேரிப்புத்தூர் பகுதியை சேர்ந்த ஜான்சி பிரியாவும், அதே பகுதியை சேர்ந்த செல்வகுமாரும் கடந்த 4 ஆண்டுகளாக நட்பாக பழகி வந்துள்ளனர்.

காதலி உடலில் தீ பற்றியதும் தப்பி ஓடிய காதலன்..!!!

இந்நிலையில் இன்று காலை இருவரும் ஜான்சியின் பாட்டி வீட்டுக்கு சென்றுள்ளனர்.அப்போது, திடீரென இருவரும் மண்ணெண்ணை ஊற்றி, தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. ஜான்சியின் உடலில் தீப்பற்றியதால், செல்வகுமார் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இதைத் தொடர்ந்து தீக்காயங்களுடன், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜான்சி உயிரிழந்தார். இதையடுத்து, இடையார்பாளையம் அருகே செல்வகுமாரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

காதலி ஜான்சிராணிக்கு செல்வகுமார் தீ வைத்தாரா, என்பது உள்ளிட்ட கோணங்களில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்