28 வருடங்களின் பின்னர் வலையில் சிக்கிய அரிய வகை “வேலா”

28 வருடங்களின் பின்னர் வலையில் சிக்கிய அரிய வகை “வேலா”
திருகோணமலை, மூதூர் கடற்பரப்பில் அரிய வகை மீன் இனமொன்று, வலையில் பிடிபட்டுள்ளதென, மீனவர்கள் தெரிவித்தனர்.

மீனவர்கள் இருவர், நேற்று (11) மாலை சிறு தோணியில் கடலுக்குச் சென்ற வேளையிலே, இந்த அரிய வகை மீன் பிடிபட்டுள்ளது.

அப்பகுதியில் 28 வருடங்களின் பின்னர் இவ்வாறானதொரு மீன் பிடிபட்டுள்ளதெனவும், மீனவர்கள் தெரிவித்தனர்.

“வேலா” என்றழைக்கப்படும் இந்த மீன் இனம், ஐந்தடி நீளத்தையும் மூன்றரையடி அகலத்தையும் கொண்டுள்ளது.

190 கிலோகிராம் நிறையுடைய இந்த வேலா மீன், 1 இலட்சத்தி 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்