நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை அடுத்த சில தினங்களில் குறைவடையும்: வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை அடுத்த சில தினங்களில் குறைவடையும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும், ”வடக்கு மாகாணத்தின் ஊடாகவும் மற்றும் தென்மாகாணத்தின் கடற்கரையோரங்களிலும் வலுவான காற்று வீசக்கூடும் . வடக்கு , வடமேற்கு , மேற்கு , மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் ஓரளவு மழைபெய்யும்.

மேற்கு , சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின்சில பகுதிகள் காலை வேளைகளில் பனிமூட்டத்துடன் கூடிய காலநிலை காணப்படும்.

காங்கேசன்துறையிலிருந்து முல்லலைத்தீவு ஊடாக புத்தளம் வரையிலான கடற்கரைப்பகுதியில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்