11வது உலக பாதுகாப்பு சேவை “கோல்ப் வெற்றிக்கிண்ணம்” திருகோணமலை சீனக்குடா விமான நிலைய விளையாட்டு மைதானத்தில் 

11வது உலக பாதுகாப்பு சேவை “கோல்ப் வெற்றிக்கிண்ணம்” திருகோணமலை சீனக்குடா விமான நிலையத்தின்  ஈகில் கோல்ட் லிங்ஸ் விளையாட்டு மைதானத்தில் அட்மிரல்  ​ரவீந்ரா விஜே குணரத்ன தலைமையில் இன்று (13) காலை ஆரம்பமானது.
விளையாட்டின் மூலம் நட்பு எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட  இந்நிகழ்வு  1948ம் ஆண்டு 05 நாடுகளின் பங்களிப்புடன் உருவாகி இன்று 136 நாடுகள் உறுப்புரிமை பெற்று உலக பாதுகாப்பு சேவை விளையாட்டு கவுன்சில் எனும் பெயரில் இயங்கி வருகின்றது.
இவ்விளையாட்டு நிகழ்வானது நான்கு வருடத்திற்கு ஒரு முறை நடாத்தப்பட்டு வருவதாகவும் 1974ம் ஆண்டு முதல் இலங்கை இதன் உறுப்புருமையை பெற்றுள்ளதுடன்  இலங்கையில் நடாத்தப்படும் முதலாவது நிகழ்வாகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விளையாட்டில் நிகழ்வில் பஹ்ரைன், கனடா, எஸ்டோனியா, பிரான்ஸ், ஜேர்மனி, நெதர்லாந்து, பாகிஸ்தான், ஸ்பைன், உகண்டா, அமேரிக்கா, சிம்பாபேய் போன்ற நாடுகளைச்சேர்ந்த வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளதாகவும் 24 விளையாட்டுக்கள் இடம் பெறவுள்ளதாகவும் இலங்கை விமானப்படைத்தளைமையகம் தெரிவித்துள்ளது.
இன்று திங்கள் கிழமை 13ம்திகதி முதல் 17ம் திகதி வரை நடைபெறவுள்ளதாகவும் தெரியவருகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்