முதுகுவலி மாத்திரை வைத்திருந்த பெண்ணிற்கு, மரண தண்டனையா..?

முதுகுவலி மாத்திரை வைத்திருந்த பெண்ணிற்கு, மரண தண்டனையா..?

பிரித்தானிய நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் முதுகுவலி மாத்திரையை கொண்டு சென்ற குற்றத்திற்காக அவருக்கு மரண தண்டனை விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த Laura Plummer(33) என்பவர் கடந்த மாதம் எகிப்து நாட்டிற்கு பயணமாகியுள்ளார்.
எகிப்தில் உள்ள அவரது நண்பர் ஒருவருக்கு அடிக்கடி முதுகுவலி ஏற்படும் என்பதால் Tramadol என்ற மாத்திரையை நூற்றுக்கணக்கில் கொண்டு சென்றுள்ளார்.

ஆனால், விமான நிலையத்தில் இறங்கியதும் நடத்திய பரிசோதனையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எகிப்து நாட்டு சட்டப்படி, வலி நிவாரணி மாத்திரையான Tramadol-யை வைத்திருக்க அனுமதி கிடையாது.
ஏனெனில், இம்மாத்திரையை பயன்படுத்தி ஹெராய்ன் போதை மருந்துகளை தயாரிக்க முடியும் என்பதால் இச்சட்டம் அந்நாட்டில் அமுலில் உள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்