தனுஸ்கோடி கடல் பிராந்தியத்தில் நேற்று கரை ஒதுங்கிய இலங்கை படகு:- பாதுகாப்புத்துறையினர் தீவிர விசாரணை(வீடியோ)

-மன்னார் நிருபர்-
(14-11-2017)

தனுஸ் கோடி அருகே ஒத்ததாளை பகுதியில் இலங்கை பைபர் படகு ஆளில்லாத நிலையில் நேற்று மாலை கரை ஒதுங்கியுள்ளமை குறித்து பாதுகாப்பு வட்டாரங்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் தனுஸ்கோடி அருகே மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற ஒத்ததாளை பகுதியில் ஆளில்லாத நிலையில் இலங்கையை சேர்ந்த பைபர் படகு கரை ஒதுங்கியுள்ளதாக அப்பகுதி மீனவர்கள் மெரைன் போலீஸாருக்கு நேற்று (13) தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து மெரைன் போலீஸார் சம்பவ இடத்திற்க்குச் சென்று சோதனை நடத்தினர்.

சோதனையின் போது கைப்பற்றப்பட்ட பைப்பர் படகு இலங்கையின் தலைமன்னார் பகுதியைச் சேர்ந்தது எனவும் அதில் சட்ட விரோதமான முறையில் இலங்கை நபர்கள் யாரேனும் தமிழகத்திற்குள் ஊடுருவி இருக்காலம் என்ற கோணத்தில் விசாரனை மேற்கொண்டு வருவதாக தனுஸ்கோடி மெரைன் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதே போல கீயு பிரிவு மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரனை மேற் கொண்டு வருகின்றனர்.
மேலும் கைபற்றப்பட்ட படகினை டிராக்டர் மூலம் மெரைன் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

ஆளில்லாமல் கரை ஒதுங்கிய படகு குறித்து தனுஸ்கோடி போலீஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரனை மேற் கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தகக்து.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்