”வேறு ஒரு விஷயம் இருக்கு. வெயிட் பண்ணுங்க” என்று சஸ்பென்ஸ் சொல்லும் சிம்பு

சிம்பு நடிப்பில் வெளியான படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்தததினால், தற்போது படமில்லாமல் இருக்கிறார். அதனால் தன்னுடைய நண்பர் விடிவி கணேஷ் தயாரிப்பில் சந்தானம் நடிக்கும் ‘சக்க போடு போடு ராஜா’ படத்துக்கு இசையமைத்து வருகிறார்.

இதற்கிடையில், அவர் பாடி சமீபத்தில் ‘தட்றோம் தூக்கறோம்…” என்ற பாடல் வெளியாகியுள்ளது. இதனால் பி.ஜே.பியினரின் கண்டனத்துக்குள்ளான சிம்பு, அந்தப்பாடல் மூலம் யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக சில தினங்களுக்கு முன் அறிவித்தார். இந்நிலையில் தனது ரசிகர்களுக்காக ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார் சிம்பு.

”சக்க போடு போடு ராஜா’ படத்தின் பாடல்களுக்கும் டிரைலருக்கும் நல்ல ரெஸ்பான்ஸ் கொடுத்திருக்கீங்க! ரொம்ப நாள் ஆச்சு! உங்ககிட்ட பேசணும்னு தோணிடுச்சு. என்னோட மத்த சாங்சுக்கும் ரெஸ்பான்ஸ் குடுத்துட்டிருக்கீங்க! இப்ப சோஷியல் மீடியாவில் வேற இல்ல. பசங்க எல்லாம் பாவம்! நானும் உங்கள நிறைய மிஸ் பண்றேன். நீங்கல்லாம் இருக்கீங்க! பார்த்துப்பீங்கன்ற நம்பிக்கை இருக்கு. இது வந்து படத்தோட கெட்-அப் எல்லாம் இல்ல! அதபத்தி யோசிக்காதீங்க! வேறு ஒரு விஷயம் இருக்கு. வெயிட் பண்ணுங்க, மீண்டும் வருவேன்” என்று அதில் பேசியிருக்கிறார்.

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் துவங்கவிருக்கிறது என்று சொல்லப்பட்ட நிலையில் தன்னுடைய ஹேர்ஸ்டைலை மாற்றிக் கொண்டிருப்பதோடு, ”வேறு ஒரு விஷயம் இருக்கு. வெயிட் பண்ணுங்க” என்று சஸ்பென்ஸும் வைத்திருக்கிறார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்