இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் தயாராக கொல்கத்தா சென்றடைந்தனர் வீரர்கள்

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய வீரர்கள் கொல்கத்தா சென்றடைந்தனர்.

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் கொல்கத்தாவில் வருகிற 16-ந்தேதி (வியாழக்கிழமை) தொடங்குகிறது. நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 கிரிக்கெட் போட்டி கடந்த 7-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) திருவனந்தபுரத்தில் உள்ள க்ரீன்பீல்டு மைதானத்தில் நடைபெற்றது.

அதன்பின் இந்திய வீரர்கள் அவரவர் சொந்த மாநிலங்களுக்குச் சென்றனர். வருகிற 16-ந்தேதி கொல்கத்தாவில் முதல் டெஸ்ட் தொடங்க இருப்பதால், டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் கொல்கத்தா சென்றனர். தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உள்பட சில வீரர்கள் நேற்று மாலை கொல்கத்தா சென்றடைந்தனர். உமேஷ் யாதவ், தவான் ஆகியோரும் சென்றடைந்தனர்.

இந்திய அணி கேப்டன் விராட் கோலி இன்று காலை சென்றடைந்தார். மற்ற வீரர்களும் இன்றைக்குள் கொல்கத்தா சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வீரர்கள் அனைவரும் கொல்கத்தா சென்றடைந்த பின்னர், இந்தியா நாளை காலையில் இருந்து பயிற்சியை தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்