இந்திய கடலோர காவல் படையினர்  ராமேஸ்வரம் மீனவர் மீது துப்பாக்கிச்சூடு-அரசு மருத்துவமனையில் அனுமதி(video)

 

 துப்பாக்கிசூடு நடத்திய  அதிகாரிகளை கைது செய்ய மீனவ அமைப்புகள் கோரிக்கை –(வீடியோ)
 
-மன்னார் நிருபர்-
 
(14-11-2017)
இந்திய கடலோர காவல்படையினர் நடத்திய துப்பாக்கிசூட்டில் காயமடைந்த மீனவர்கள் ராமேஸ்வரம் அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று திங்கட்கிழமை(13) காலை ராமேஸ்வரம் துறை முகத்திலிருந்து சுமார் 450 க்கும் மேற்ப்பட்ட விசைபடகுகளில் மீன்வர்கள் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று கடலுக்குச் சென்றனர்.

இவர்கள் நேற்று திங்கட்கிழமை (13) மாலை 3 மணியளவில் கச்சைத்தீவுக்கு அருகே மீன்பிடித்துக் கொன்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் நூற்றுக்கும் மேற்ப்பட்ட படகுகளிலிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பலான மீன்பிடி சாதனங்களை சேதபப்டுத்தி விரட்டியடித்துள்ளனர்.
 இதனையடுத்து கைது நடவடிக்கைக்கு அச்சப்பட்டு ஏராளமான மீனவர்கள் கரை திரும்பியுள்ளனர்.
 இந்த நிலையில் அவர்களை வழி மறித்து இந்திய கடலோரகாவல் படையினர் நிறுத்தியுளள்னர். ஆனால் படகுகள் நிற்காமல் நாலாபுறமும் ஓடியுள்ளது.
இதனை தொடர்ந்து இந்தியக் கடலோர காவல் படை கப்பலில் இருந்த வீரர்கள் ரப்பர் மற்றும் டம்மி குண்டு துப்பாக்கியால் ராமேஸ்வரம் படகுகளை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளனர்.
 இதன் போது மீனவரான அந்தோணிபிச்சை என்பவரின் வலது கையில் பலத்தகாயம் ஏற்பட்டுள்ளது.
 மேலும் படகின் கண்ணாடிகள் சிதறியோடியுள்ளது. இதனையடுத்து உயிர் பயத்தால் படகை நிறுத்தியுள்ளனர்.
படகில் இருந்த மீனவர்களை இந்திய கடலோர காவல் படை அதிகாரிகள் ஹிந்தி பேச சொல்லி துன்புறுத்தியதாகவும், படகில் வைத்து காவல்படை அதிகாரிகள் அடித்ததாகவும் உயிர் தப்பிய மீனவர்கள் தெரிவித்தனர்.
துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் காயம் அடைந்த அந்தோனிபிச்சை மற்றும் ஜான்ரோ ஆகிய இரு மீனவர்களும் இராமேஸ்வரம் அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மீனவரகள்; மீது இந்திய கடலோர காவல்படை துப்பாக்கியால் சுட்ட செய்தி ராமநாதபுரம் மாவட்ட கடலோர மீனவக்கிராமங்களில் பதட்ட நிலை ஏற்ப்படுத்தியுள்ளது.
மேலும் இச்சம்பவத்தை கண்டித்தும் துப்பாக்கி சுட்டு நடத்திய கடலோர காவல் படை அதிகாரிகளை கைது செய்ய வலியுறுத்தியும் மீனவ சங்கங்கள்   அவசர ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளனர்.
பேட்டி 
ஜான்ரோ – துப்பாக்கி சூடுபட்ட மீனவர்
ஆந்தோனிபிச்சை – துப்பாக்கி சூடுபட்ட மீனவர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்