தாலிபான்கள் தாக்குதலால் ஆப்கானிஸ்தானில் 8 போலீஸார் பலி!

ஆப்கானிஸ்தானின் மேற்குப் பகுதியில் தாலிபான்கள் தாக்குதலில் 8 போலீஸார் பலியாகினர்.
இதுகுறித்து ஆப்கான் அதிகாரிகள் தரப்பில், “ஆப்கானிஸ்தானில் பராஹ் மாகாணத்தில் உள்ள சோதனைச் சாவடியில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை தாலிபான்கள் தாக்குதல் நடத்தினர். தாலிபன்கள் தொடர்ந்து 10 முதல் 15 நிமிடங்கள்வரை அந்த இடத்தில் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்தத் தாக்குதலில் சோதனைச் சாவடியிலிருந்த 8 போலீஸார் பலியாகினர்” என்றார்.
ட்ரம்ப் அமெரிக்க அதிபரான பிறகு, ஆப்கனில் அமெரிக்கப் படைகள் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆப்கனில் அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறாமல் உள்ளன.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தாலிபான்கள் தொடர்ந்து ஆப்கான் அரசுப் படைகள் மற்றும் அமெரிக்கப் படைகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்