சாலையை கடக்க முயன்ற சிறுவன் பாய்ந்து வந்த லொறியில் மோதாமல் சமயோசிதமாக தப்பிய காட்சிகள்..!!

நோர்வே நாட்டில் சாலையை கடக்க முயன்ற சிறுவன் ஒருவன், பாய்ந்து வந்த லொறியில் மோதாமல் சமயோசிதமாக தப்பிய அதிரவைக்கும் காட்சிகள் வீடியோவாக வெளியாகியுள்ளது.

நிஞ்சை உலுக்கும் இந்த சம்பவம் நார்வே நாட்டின் Høyanger பகுதியில் நடந்துள்ளது.

சம்பவத்தின்போது நான்கைந்து இளைஞர்கள் சாலையை கடக்கும் பொருட்டு ஆயத்தமாக காத்திருந்துள்ளனர்.

அப்போது பேருந்து ஒன்று அவர்களை கடந்து மெதுவாக சென்றுள்ளது. இதனைத் தொடர்ந்து பேருந்து சென்ற அடுத்த நொடியில் அந்த இளைஞர்கள் ஒன்றாக சாலையை கடக்க எத்தனித்துள்ளனர்.

இதனிடையே வெள்ளை நிற உடுப்பு அணிந்திருந்த சிறுவன் ஒருவன் சாலையின் இருபுறமும் கவனிக்காமல் கடக்க முயன்றுள்ளான்.

அப்போது எதிர் திசையில் இருந்து பாய்ந்து வந்த லொறி ஒன்று சிறுவன் மீது மோதி தூக்கி வீசியிருக்கும். ஆனால் அந்த லொறியின் ஓட்டுனர் சிறுவன் சாலையை கடப்பதை கவனித்து திடீரென்று லொறியை நிறுத்தியுள்ளார்.

இதில் சிறுவன் மரண பயத்தில் ஓடும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த வீடியோவானது சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்