ஓடும் ரெயிலில் இருந்து மகளுடன் குதித்த பெண்..!!

உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரில் பெண் ஒருவர் தனது 15 வயது மகளுடன் கவுராவிலிருந்து டெல்லிக்கு ரெயிலில் சென்று கொண்டிருந்தார். ரெயிலானது கான்பூர் நகருக்கு அருகில் சென்று கொண்டிருக்கும் போது அந்த பெண்களிடம் சில ஆண்கள் தவறான முறையில் பேசியுள்ளனர். இதனால் அவர்களுக்கிடையே கடுமையான வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது.

இதனால் கோபமடைந்த மர்ம கும்பல் சிறுமியிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றுள்ளது. அவர்களிடமிருந்து தங்களை காத்துக் கொள்ள அந்த பெண் தனது மகளுடன் ஓடும் ரெயிலிருந்து குதித்தார். கீழே விழுந்த இருவரும் மயக்கமடைந்தனர். சில மணி நேரங்களுக்கு பிறகு விழித்த அவர்கள் அருகில் இருந்த ரெயில் நிலையத்தில் உள்ள போலீசாரிடம் புகார் அளித்தனர்.

இதையடுத்து படுகாயமடைந்த அவர்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து பெண்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.201711131432238524_Mother-daughter-jump-off-train-near-Kanpur-after-mens-try_SECVPF

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்