மாட்டு பட்டிகளை உடனடியாக அகற்றவும்! பம்மதவாச்சி மக்கள் கோரிக்கை

(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை-மொறவெவ பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட பம்மதவாச்சி பகுதியில் வௌி இடங்களிலிருந்து வருகை தந்து மாட்டு பட்டிகளை நடாத்தி வருபவர்களின் மாட்டு பட்டிகளை உடனடியாக அகற்றுமாறு அக்கிராமமக்கள் வேணடுகோள் விடுக்கின்றனர்.

யுத்தத்தினால் பாதிக்கப்ட்டு சொத்துக்களை இழந்து பல அகதி முகாம்களில் காலத்தை கழித்து வந்து மீண்டும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக விவசாயம்,வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கைகளை முன்னெடுப்பதற்கு மாடுகளின் தொல்லை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

கிண்ணியா-கன்தளாய்-நிலாவௌி போன்ற இடங்களிலுள்ளவர்களின் மாடுகளை எங்களுடைய பகுதிக்கு கொண்டு வந்து மாட்டு பட்டிகளை அடித்துள்ளதாகவும் இதனால் விவசாய பயிர்களுக்குள்ளேயும். வீட்டு தோட்டங்களுக்குள்ளேயும் அம்மாடுகள் வருவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் விஷனம் தெரிவிக்கின்றனர்.

இவ்விடயமாக கிராம உத்தியோகத்தர் ஊடாக பிரதேச செயலாளருக்கும்.மொறவெவ பொலிஸாருக்கும் தெரியப்படுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையெனவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

அரசினால் வாழ்வாதார வசதிகள் செய்து தராவிட்டாலும் வியர்வை சிந்தி தங்களின் விவசாயத்தினையும் தோட்ட பயிர்ச்செய்கையினையும் செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் அக்கிராமமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்