வவுனியாவில் 120 மில்லியன் ரூபா செலவில் யுவதிகளுக்கான தையல் பயிற்சி நிலையங்கள்

28 மில்லியன் ரூபா செலவில் தொழில் முயற்சியாளர்களுக்கான தையல் பயிற்சி நிலையங்கள் பரீட் இஸ்பான் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களின் அமைச்சின் கீழான SLITA நிறுவகத்தின் மூலம் வவுனியா மாவட்ட கிராம இளைஞர், யுவதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தினூடாக தையல் பயிற்சி நிலையங்களை அமைச்சர் றிஷாட் பதியுதீன் நேற்றும் நேற்று முன்தினம்(9,10) அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
சின்னச்சிப்பிக்குளம், பாவற்குளம், சூடுவெந்தபுலவு, சாளம்பைக்குளம், மெனிக்பாம், ஆண்டியாபுளியங்குளம் ஆகிய கிராமங்களில் இந்த நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டன.

ஆரம்பிக்கப்பட்டுள்ள ஆறு தையல் பயிற்சி நிலையங்களில் ஒவ்வொரு நிலையத்திலும் இருபது யுவதிகள் வீதம் ஆறு நிலையங்களில் 120 யுவதிகள் பயிற்சி பெற்று பயன்பெறவுள்ளனர்.

இத்திட்டத்திற்கென ஒவ்வொரு நிலையத்துக்கும் இரண்டு மில்லியன் ரூபா வீதம் மொத்தமாக 12 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளதாக அமைச்சரின் பொதுசன தொடர்பு அதிகாரி மொஹிடீன் தெரிவித்தார்.

சில வாரங்களுக்கு முன்னர் வவுனியா தமிழ்ப் பிரதேசங்களிலும் இவ்வாறான எட்டு தையல் பயிற்சி நிலையங்களுக்கு இரண்டு மில்லியன் ரூபா வீதம் 16 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்