டெஸ்டில் வெல்வதே எங்களின் முதல் இலக்கு – விருத்திமான் சாஹா

தென் ஆப்ரிக்க சுற்றுப்பயணம் பற்றி தற்போது எதுவும் நினைக்கவில்லை. எங்களின் கவனம் எல்லாம் இலங்கை டெஸ்ட் தொடரில் தான் இருக்கிறது. கொல்கத்தாவில் நடக்க உள்ள தொடக்க டெஸ்டில் வெல்வதே எங்களின் முதல் இலக்கு. ஒவ்வொரு போட்டியுமே முக்கியம் வாய்ந்தது மட்டுமல்ல, சவாலானதும் கூட. இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய பிறகு தென் ஆப்ரிக்க சவால் பற்றி பார்க்கலாம்.

சுழற்பந்துவீச்சாளர்களுக்கு விக்கெட் கீப்பிங் செய்வது சற்று கடினம் தான். குறிப்பாக, அஷ்வின் ஒவ்வொரு பந்தையும் ஒவ்வொரு விதமாக வீசுவார். ஜடேஜா, குல்தீப்பை விடவும் அஷ்வின் போடும்போது கீப்பராக அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். மூன்று ஸ்பின்னர்களுடன் களமிறங்குவது குறித்து ஆடுகளத்தை பார்த்த பிறகே முடிவு செய்வோம். – இந்திய அணி விக்கெட் கீப்பர் விருத்திமான் சாஹா

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்