பேருந்து ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் படுகாயம்..

காரைதீவு பிரதான வீதியில் பேருந்து ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்த நபர் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பேருந்து கல்முனை நோக்கிச் சென்ற போது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் பேருந்துடன் மோதுண்டதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் சம்மாந்துறை போக்குவரத்துப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்