யுத்தத்தால் இலங்கைக்கு 400 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பு

முப்பது வருட யுத்தம் காரணமாக இலங்கைக்கு 400 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் சஞ்சிகை தகவல் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அரசாங்கம் 200 பில்லியன் டொலர்களையும் LTTE யினரும் அதே அளவான தொகையை யுத்தத்துக்காக செலவு செய்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
யுத்தத்தால் இடம்பெற்ற இழப்பை இலங்கை இன்னும் கணக்கிடவில்லை எனத் தெரிவித்த அமைச்சர் இந்த இழப்பை பற்றி சிந்தித்தாவது மீண்டுமொரு யுத்தம் ஏற்படாமல் தவிர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென குறிப்பிட்டார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்