மட்டக்களப்பு புதிய அரச அதிபராக மா.உதயகுமார்.

மட்டக்களப்பு மாவட்ட புதிய அரச அதிபர் நியமனத்திற்கு இதுவரை இருந்துவந்த இழுபறி நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மட்டுநகர் மாநகர ஆணையாளராக ஏற்கனவே கடமையாற்றி கொழும்புக்கு இடமாற்றம் பெற்ற மா.உதயகுமார் மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபராக கடமையாற்றிய திருமதி சாள்ஷ் சுங்கத்திணைக்கள பணிப்பாளர் நாயகமாக இடமாற்றலாகி கடந்ந 01ஃ10ஃ2017இம் திகதி சென்றபின் இவ்வாறான நிலையில் இந்த நான்கு அதிகாரிகளுக்கும் கடந்தவாரம் நேர்முகப்பரீட்சை பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் நடத்தியிருந்தார் இதேவேளை திருகோணமலை அரச அதிபர் புஷ்பகுமார் பதில்கடமைக்காக மட்டக்களப்பு அரச அதிபராக தற்காலிகமாக நியமிக்கப்பட்ட நிலையில் சுமார் ஒரு மாதகாலமாக  மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் எவருமே இல்லாத மாவட்டமாக மட்டக்களப்பு காணப்பட்டது.

இந்தக்குறை நீங்கி தற்போது மட்டக்களப்பு மாவட்டத்திற்கு புதிய அரச அதிபர் நியமனம் கிடைக்கப் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்