மன்னார் பள்ளிமுனை மீனவரின் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான 700 கிலோ பாரை மீன்களை கடற்படையினர் பறிமுதல்

 
 மன்னார் நிருபர்-
 
(14-11-2017)
மன்னார் பள்ளிமுனை கடற்பகுதியில் இருந்து நேற்று   திங்கட்கிழமை(13) மாலை இரணைதீவு மேற்கு கடல் பகுதிக்குச் சென்று மீன் பிடித்து விட்டு கரை திரும்பிய மீனவர் ஒருவரின் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பாரை மீன்களை கடற்படையினர் இன்று செவ்வாய்க்கிழமை(14) காலை பள்ளிமுனை கடற்கரையில் வைத்து பறிமுதல் செய்துள்ளதோடு,குறித்த மீன்களை மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,,,,
மன்னார் பள்ளிமுனையைச் சேர்ந்த மீனவர் ஒருவர் நேற்று (13) திங்கட்கிழமை மாலை மீன் பிடிப்பதற்காக பள்ளிமுனை கடற்பகுதியில் இருந்து சக மீனவர்களுடன் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளார்.
இந்த நிலையில் குறித்த மீனவர் இன்று செவ்வாய்க்கிழமை(14) காலை இரணைதீவு மேற்கு கடற்பகுதியில் உள்ள கடற்படை முகாமிற்கு சற்று தொலைவில் சுருக்கு வலையினை பயண்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்டுள்ளார்.
இதன் போது சுமார் 700 கிலோ பாரை மீன்களை குறித்த மீனவர் பிடித்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த மீன்களை பள்ளிமுனை கடற்கரைக்கு இன்று செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் குறித்த மீனவர் சக மீனவர்களின் உதவியுடன் கொண்டு வந்துள்ளார்.
இதன் போது பள்ளிமுனை கடற்கரையில் இருந்த கடற்படையினர் குறித்த மீனவரின் படகில் உள்ள மீன்களை கரைக்கு கொண்டு செல்ல அனுமதிக்காததோடு, குறித்த மீன்கள் டைனமெட் வெடி பொருள் பயண்படுத்தியே பிடிக்கப்பட்டுள்ளதாகவும், தமக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளதாகவும்,கடற்படையினர் மீனவர்களிடம் தெரிவித்துள்ளனர்.
எனினும் குறித்த மீன்கள் இன்று செவ்வாய்க்கிழமை (14) காலை இரணை தீவு மேற்கு  கடற்பகுதியில் உள்ள கடற்படை முகாமிற்கு சற்று தொலைவில் சுருக்கு வலையினை பயண்படுத்தியே பிடிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் கடற்படையினரிடம் தெரிவித்ததோடு, சம்பவ இடத்திற்கு வந்த மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளுக்க முன் மீன்கள் வெட்டி காண்பிக்கப்பட்டது.
எனினும் குறித்த மீன்கள் டைனமெட் பயண்படுத்தியே பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த கடற்படையினர் குறித்த மீனவர்களை  அச்சுரூத்தும் வகையில் நடந்து கொண்டதோடு, கடற்படையினரால் பள்ளிமுனை கடற்கரையில் இடை மறித்து வைக்கப்பட்டிருந்த பல இலட்சம் ரூபாய் பெறுமதியான சுமார் 700 கிலோ பாரை மீன்களை மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள்   குறித்த மீன்களை மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதே வேளை கடற்தொழில் திணைக்களத்தின் அனமதியுடன் தாங்கள் சுருக்கு வலையை பயண்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்டு வருகின்ற போதும்,கடற்படையினர் தமக்கு தொடர்ச்சியாக கடலிலும்,கடற்கரையிலும் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாக்குவதாக பள்ளிமுனை மீனவர் ஒருவர் தெரிவித்தார்.
சட்ட ரீதியான முறையில் மீன் பிடிக்கின்ற போதும்,தாங்கள் தடை செய்யப்பட்ட டைனமெட் வெடிபொருட்களை பயண்படுத்தி மீன் பிடிப்பதாக கடற்படையினர் தம்மீது போலி முறைப்பாடுகளை பதிவு செய்வதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கடற்படையினரின் குறித்த செயற்பாடகளினால் தமது தொழில் தொடர்ச்சியாக பாதீப்பதோடு,தமது அன்றாட வாழ்வாதாரம் பாதீக்கப்பட்டு வருவதாகவும் மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
பள்ளிமுனை கடற்படையினரினால் இன்று செவ்வாய்க்கிழமை (14) காலை பள்ளிமுனை கடற்கரையில் வைத்து கைப்பற்றப்பட்டு மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான மீன்களின் நிலை குறித்து மாவட்ட கடற்தொழில் திணைக்கள மாவட்ட பணிப்பாளர் என்.மெராண்டாவிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது,,,
பள்ளிமுனை கடற்பகுதியில் தடைசெய்யப்பட்ட டைனமெட் வெடிபொருட்களை பயண்படுத்தி பிடிக்கப்பட்டதாக கருதி சுமார் 700 கிலோ மீன்களை பள்ளிமுனை கடற்படையினர் மீட்டு மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மீனவர்களிடம் விசாரனைகள் மேற்கொள்ளப்பட்டு பின் நீதிமன்றத்தில் குறித்த மீன்களின் மாதிரிகள் ஒப்படைக்கப்படும்.என அவர் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்