அண்ணாத்துரை பாடல்கள் அனைத்தும் இலவசம்

விஜய் ஆண்டனியின் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள படம் அண்ணாத்துரை. அவருக்கு ஜோடியாக டயனா சம்பிகா, மஹிமா நடித்துள்ளனர். விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் நிறுவனமும் ராதிகா சரத்குமாரின் ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில் நடிகர்கள் ராதா ரவி, காளி வெங்கட், ஜுவல் மேரி, நளினிகாந்த், ரிந்து ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் இசையையும் படத்தொகுப்பையும் விஜய் அண்டனியே செய்துள்ளார். தில் ராஜு ஒளிப்பதிவு செய்துள்ளார். அருண் பாரதியின் பாடல் வரிகளில் அண்ணாதுரை உருவாகியுள்ளது. அறிமுக இயக்குனர் ஜி.ஸ்ரீனிவாசன் இயக்குகிறார்.

இதன் பாடல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடல்கள் அனைத்தையும் விஜய்ஆண்டனி டாட் காம் www.vijayantony.com என்ற இணையதள முகவரியில் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஒரிஜினல் தரத்துடன் கிடைக்கும். இதற்கு கட்டணம் எதுவும் கிடையாது. ஒரு முன்னணி இசை அமைப்பாளரிள் அனைத்து பாடல்களும் இலவசம் என்பது இதுவே முதல் முறையாகும். தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்