சுனாமி உண்மையா??? மக்கள் பெரும் பதற்றம்!!! அச்சத்தில் கிழக்கு கரையோர மக்கள்……

கல்முனை காரைதீவு மற்றும் பாண்டிருப்பு பேன்ற கிழக்கின் சில பகுதிகளில் கடல் மற்றும் வீடுகளில் உள்ள கிணறுகளின் நீர் மட்டங்களில் ஏற்பட்ட மாற்றத்தினால் மக்கள் பதற்றமடைந்துள்ளனர். கடல் நீர் உள்வாங்கியதாகவும் கிணறுகளின் நீர்மட்டம் குறைவடைந்ததாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் கடலினை அண்டிய பகுதியிலுள்ள பாடசாலைகள்,வங்கிகள்,அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் போன்றன மூடப்பட்டுள்ளதாகவும். பாடசாலைக்கு சென்ற தமது பிள்ளைகளை பெற்றோர் சென்று வீடுகளுக்கு அழைத்துச் செல்வதற்காக பாடசாலைகளுக்கு செல்லவதாகவும் எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும் இது தொடர்பில் Tamilcnn செய்திப்பிரிவு அனர்த்த முகாமைத்துவ நிலையத்திடம் தொடர்புகொண்ட கேட்டபோது, சுனாமி தொடர்பான எவ்விதமான எச்சரிக்கையும் இதுவரை விடுக்கப்படவில்லையெனவும். மக்கள் எவ்விதமான அச்சமடையத் தேவையில்லையெனவும் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்