பொங்கல் வெளியீடு: ‘கலகலப்பு 2’

சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி வரும் ‘கலகலப்பு 2’ படத்தின் படப்பிடிப்பை டிசம்பருக்குள் முடித்து, பொங்கலுக்கு வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.

டிசம்பரில் ‘சங்கமித்ரா’ படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாக, அக்டோபரில் ‘கலகலப்பு 2’ படப்பிடிப்பைத் தொடங்கினார் சுந்தர்.சி. அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு தயாரித்து வருகிறார்.

காரைக்குடியில் தொடங்கப்பட்ட முதற்கட்ட படப்பிடிப்பைத் தொடர்ந்து, தற்போது காசியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஜீவா, ஜெய், கத்ரீன் தெரசா மற்றும் நிக்கி கல்ராணி ஆகியோர் நடித்து வரும் படத்துக்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.

இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது. மேலும், டிசம்பருக்குள் மொத்த படப்பிடிப்பையும் முடித்து பொங்கலுக்கு வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.

‘கலகலப்பு 2’ முடித்துவிட்டு ‘சங்கமித்ரா’ பணிகளைத் தொடங்க சுந்தர்.சி திட்டமிட்டுள்ளார். இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்